
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை(PTA) மாற்றியமைப்பதோடு, சர்வதேச நாடுகளின் அழுத்தங்களால், அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக, CTAயின் வரைவு அமையப்பெற்றுள்ளது. இவ்வரைவு, தற்பொழுது நடைமுறையில் அமுள்ப்படுத்தப்படாமல் இருப்பினும், இறுதி வரைவாக அமையப்பெற்று, இலங்கை அமைச்சரவையால் ஒப்புதல் வளங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வரைவு, ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பினை தொடர்ச்சியாக நடாத்துவதற்கு பல வகைகளில் ஓர் கருவியாக அமைந்திருக்கிறது. இது தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு வடிவங்கள் இலங்கையில் என்றும் ஓர் நிரந்தர அம்சமாகும் என்பதனை வலியுறுத்துகின்றது. (6)
உலக அரசியலில் பயங்கரவாத முறியடிப்புச் சட்டம் (CTA)
மனித உரிமைகளுக்கான அறக்கட்டளை (Foundation for Human Rights) போன்ற பல சர்வதேச மனிதநேய அமைப்புக்கள், CTAயின் வரைவினை, இலங்கை அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளின் ஓர் கருவியாக இனம் கண்டுள்ளனர். இதற்கு, ஓர் இணை அறிக்கை மூலம், தங்களது எதிர்ப்பினையும் தெரிவித்துள்ளனர். (5) (6)

31.10.17 முதல் 03.11.17 வரை, ஜீன் லாம்பேர்ட் அவர்களின் தலைமையின் கீழ், ஐரோப்பிய பாராளுமன்றத்து அங்கத்தவர்கள், இலங்கைக்குச் சென்றிருந்தார்கள். அங்கு, EUவின் பொருளாதார ஆதரவுத் திட்டங்களில் ஒன்றாகிய GSP+ஐ, இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு பல நிபந்தனைகளை விதிக்கப்பட்டது. இதில், PTA விலக்கப்படவேண்டியமையும் ஓர் முக்கிய அம்சமாக குறிக்கப்பட்டது. இருப்பினும், அச்சட்டம் விலக்கப்படாதமையால், அச்சட்டம் உடனடியாக நீக்கப்படவேண்டும் என்பதனை ஜீன் லாம்பேர்ட் உறுதியாகத் தெரிவித்துள்ளார். (3)(4)

2009ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் போன்ற வல்லாதிக்கங்களின் கூட்டுச்சதியால் தமிழிறைமை முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது. அவ்வாறிருக்க, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் புது முகமாக அமையவிருக்கும் பயங்கரவாத முறியடிப்புச் சட்டத்தின் அடக்குமுறை அம்சங்களை அறிந்தகொண்டும், இலங்கையுடன் நெருங்கிய உறவுகளை பேணுவதில் ஐரோப்பிய ஒன்றியம் தெளிவாகவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் PTAயினை உடனடியாக விலக்குவதற்கு அழுத்தம் தெரிபவிப்பது, CTAயின் வரவினை துரிதப்படுத்துவதற்கான செயலாக அமைகிறதா என்ற கேள்வி எழுகிறது என்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.
CTAயும் சர்வதேச்ச் சட்டங்களின் கோட்பாடுகளும்
2016ம் ஆண்டில் உருப்பெற்ற பயங்கரவாத முறியடிப்புச் சட்டத்தின் பல வரைவுகளுக்குப் பின், இவ்வாண்டு வரையப்பட்டிருக்கும் சட்டம், பல கோணங்களில் மீளாய்வு செய்யப்பட்ட போதிலும், இலங்கை அரசின் இனவழிப்பு நோக்கங்களை, இக்குறிப்பீடுகளினூடாக அறிந்து கொள்ளலாம்.
பலதரப்பட்ட பிரச்சனைகள் இச்சட்டத்தினுள் இருப்பினும், சர்வதேச சட்டக் கோட்பாடு வடிவங்களின் 5 பொறிமுறைகளினூடாக, நாம் இவ்வரைவினை அணுகுவோமேயானால், அச்சட்டம் எவ்வாறு இலங்கை அரசுக்கு ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஒரு இனவழிப்பினை நடத்துவதற்கு ஒரு கருவியாக அமைகிறது என்பதையும் அறியலாம். (5)
- பொதுத் தகவல்கள் மற்றும் ஆலோசனைகளின் பற்றாக்குறை
இச்சட்ட வரைவுகள் வடிவமைக்கப்பட்டமை, இச்சட்டத்தின் முக்கிய பங்குதாரர்களின் ஆலோசனைகள் கருத்திற் கொள்ளப்படாமலும்,, அவர்களின் தேவைகள் அறிந்துகொள்ளப்படாமல் உறுப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வரைவை வரையும் வேளைகளில், இச்சட்ட வரைவின் நோக்கங்கள் பற்றியும், அவற்றின் அம்சங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு அறியத்தராமையும், சர்வதேசச் சட்டக் கோட்பாடுகளின் மீறலாக அமைகின்றது. (5)
- முக்கியமான வார்த்தைப் பிரயோகங்களின் அர்த்தங்களுள் தெளிவின்மை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTAயின்) கீழ்;
- பயங்கரவாதி,
- பயங்கரவாத நடவடிக்கைகள்,
- நியாயமான,
- விசாரணை நுட்பங்கள்,
போன்ற வார்த்தைப் பிரயோகங்களுக்குத் தகுந்த விளக்கமின்மையும், வரைவிலக்கணம் அமைக்கப்படாதமையும், தொடர்ந்தும் பயங்கரவாத முறியடிப்புச் சட்டத்தின் வரைவிலும் தெளிவின்றியே உருப்பெற்றுள்ளன.
“பயங்கரவாதி” போன்ற வார்த்தைகளில் சற்று மாற்றங்கள் ஏற்ப்பட்டிருப்பினும், பரந்த அர்த்த வடிவங்களை பிரயோகிப்பதனூடாக, இச்சட்டத்தின் பங்குதாரர்களுக்கு (ஈழத்தமிழர்கள், சமூக ஆர்வலர்கள்) எதிராக நடாத்தப்படும் விசாரணைகளின் வடிவங்கள், முழுமையாக விசாரணை நடாத்தும் அதிகாரிகளின் அதிகார சக்திகளுக்குள் உள்ளடங்குகின்றன.
“பயங்கரவாதக் குற்றச் செயல்கள்” மற்றும் “பயங்கரவாதம் தொடர்பான குற்றச் செயல்கள்” எனும் வார்த்தைகளின் வரைவுகளின் அர்த்தங்கள் இதனை வலியுறுத்தும் உதாரணங்களாக அமைகின்றன.
இவ்விரு வரைவிலக்கணங்களிலும், குற்றச் செயல்கள் நடாத்துவதற்கான நோக்கம் (Intent) குறிப்பிடப்படாதமை – சர்வதேச சட்டக் கோட்பாடுகளில் சிக்கல்களை உண்டாக்குகின்றன. இது, சர்வதேச சட்டக் கோட்பாடுகளின் கட்டமைப்பு விதிகளுக்குள் உள்ளடங்காதமையே பிரதான காரணமாக அமைந்துள்ளது. இந்த விடயம் மனித உரிமைகளுக்கான அறக்கட்டளையினரின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. (5)
இங்கே, “நோக்கம்” எனும் வார்த்தைப் பிரயோகமும், அதன் அம்சங்களின் பட்டியலும், மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது, இக்குற்றங்களின் நோக்கம் தெளிவாக வரையப்பட்டிருப்பதாகவே காட்சியழிக்கின்றன. எனினும், சட்ட ரீதியாக இவ்வம்சங்களை ஆராய்வோமேயானால், இவையின் தெளிவின்மையை அறிந்து கொள்ளலாம். அதாவது, சர்வதேச சட்டக் கோட்பாட்டின் விதிகளின் படி, இவை சட்டபூர்வமான நோக்கங்களாக – அதாவது குற்றத்தின் Mens Rea (சட்டபூர்வமான நோக்கம் )ஆக – ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, இது தமிழர்களுக்கு எதிரான கருவியாக அமையப்பெற்றுள்ளன. (2)(அ)(ஆ)
இருப்பினும், ஈழத்தமிழர்களாகிய நாம், இவ்விரு அர்த்தங்களையும் மேலும் ஆராய்வோமேயானால், இலங்கை அரசின் கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பு நோக்கங்களை அறிந்து கொள்ளலாம்.
பயங்கரவாதக் குற்றச் செயல்கள் எனும் வார்த்தைப் பிரயோகத்தின் வரைவில்:
- இலங்கை அரசின் அல்லது வேறு இறைமையுள்ள அரசுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் செயல் (இ)
(இ)
பயங்கரவாதம் தொடர்பான குற்றச் செயல்கள் எனும் வார்த்தைப் பிரயோகத்தின் வரைவில்:
- இலங்கையின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு, இறைமைக்கு, அதீதமான பங்கங்களை விளைவிக்கும் செயல் (ஈ)
(ஈ)
எனும் விளக்கங்களினூடாக, தமிழிறைமையினை நிலைநாட்டும் அல்லது அதனை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளைத், தீவிரவாத்தக் குற்றச்செயல்களாக சித்தரிக்கப்படுகின்றன.
அதே வேளையில், பிராந்திய ஒருமைப்பாடு எனும் கூற்று, தமிழிறமையினை நிலைநாட்டும் தமிழீழ தேசத்தின் அமைவிற்கான வேலைகளை, இலங்கைத் தீவின் புவியியல் சார்ந்த, பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான குற்றச் செயல்களாக தெளிவாகச் சித்தரிக்கின்றது .(2)
இருப்பினும், சில வரைவிலக்கணங்களை விரிவாக அமைப்பதனூடாக, இலங்கை தனது இனவழிப்பினை நடாத்துவதற்கு குற்றவியல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கும் விலக்குகளையும், இவ்வரைவில் அமுள்ப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான விலக்குகளில் ஒன்றை ஆராய்வோமேயானால், இவ்வரைவு தமிழ் அடையாளத்தின் வெளிப்படுத்தும் அனைத்து செயல்களையும் குற்றச்செயல்களாக்குவதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.(2) (உ)
(2)(உ)
இங்கே, வார்த்தை வடிவங்களின் வரைவிலக்கணங்களும், இலங்கையின் இறைமைக்கு எதிரான “அடையாளம்”, “அறிகுறிகள்” , மற்றும் வேறு “எவ்விதமான” செயல்களின் வெளிப்பாடும், தெளிவாக ஒரு குற்றச்செயலாக வரையப்பட்டிருப்பதைக் காணலாம். இது இவர்களின் இனவழிப்பு நோக்கங்களை மேலும் அம்பலப்படுத்துகிறது.
- முன்கூட்டியத் தடுப்புக்காவல்
தடுப்பு ஆணைகளின் (Detention orders) இரு நோக்கங்களுக்காக உருப்பெற்றுள்ளன. அவை,
- நிர்வாகத் தடுப்பு நோக்கங்கள் மற்றும்,
- விசாரணை நோக்கங்கள் ஆகும்.
இவ்வாறான நோக்கங்களின் இசைவாக, பயங்கரவாத முறியடிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்கள், வளக்கின்றி 4 மாதங்களுக்குத் தடுப்பில் வைக்கப்படலாம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இது அடிப்படையான மனித உரிமை மீறலாக அமைகின்றது.(2) (5)(ஊ)
(ஊ)
அது மட்டுமின்றி, தடுப்பு ஆணைகள் வளங்கப் படுவதற்கு உரிய சட்டப் பரி சோதனைக் கோட்பாடுகள் அமைக்கப்படாதமையும், இவ்வாணைகளின் நோக்கங்களும் சர்வதேச சட்டக் கோட்பாடுகளுக்குப் புறம்பாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
தடுப்பு ஆணைகளின் நோக்கங்கள்:
- விசாரணைப் பொருட்கள் மற்றும் ஒரு குற்றச்சாட்டினைச் செய்வதில் தொடர்புடைய சான்றுகளைப் பெறுதல்
- தடுப்பிலுள்ள நபர்களை கேள்விகளினூடாக விசாரிப்பது
- இச்சட்டத்திலுள்ள குற்றங்களை செய்வது தொடர்பான சான்றுகளின் பாதுகாத்தல். (2)(எ)
(2) (எ)
இவ்வாறான வகையில், எவ்விதத் தடுப்பு ஆணையும் (Detention Orders) பொது அதிகாரிகளால் வழங்கப்படலாம் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வழங்குவதற்கு, முடிவெடுக்கும் பொறிமுறைகள் குறிப்பிடப்படாத காரணத்தினால், இது ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நடாத்துவதற்கு ஓர் பொறிமுறையாக அமைக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் புரிந்து கொள்ளலாம்.
இவ்வாறான நிர்வாக தடுப்புக்காவல்களை மேற்பார்வை செய்வதற்காக உறுவாக்கப்பட்ட மறு ஆய்வுக் குழு (Board of Review), முறியடிப்புச் சட்டத்தின் கிழ் கைது செய்யப்படுபவர்களின் தடுப்பு நிலை தொடர்பான முடிவுகள் எடுக்கும் ஓர் முக்கிய அலகாகும்.
தடுப்பு ரீதியான முடிவுகளை எடுப்பதற்குத் தெளிவான பொறிமுறைகள் CTAயின் கீழ் மறு ஆய்வுக் குழுவுக்கு வரையப்படாதமை, ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சட்ட ரீதியாக நடாத்துவதற்கு இவ்வதிகாரிகளுக்குச் சுதந்திரத்தை வழங்குகிறது. இது தமிழர்களுக்கு எதிராக இனவழிப்பினைத் தொடர்ந்தும் நடாத்துவதற்கு இசைவாகவும் அமைகிறது.(2)
இவ்வரைவினூடாக உறுவாக்கப்பட்ட பயங்கரவாத முறியடிப்பு அமைப்பு (Counter Terrorism Agency), விசாரணை உத்திகளின் வளர்ச்சி நோக்கங்களுக்காகவும், பயங்கரவாத செயல்களைத் தடுத்து அதன் விபரங்களை குறிப்பிடுவதற்காகவும் வரையப்பட்டுள்ளது.
இதனூடாக ” விசாரணை உத்திகளை மேம்படுத்தல்” எனும் போர்வையில், சித்திரவதைக்கான பொறிமுறைகளை விரிவுபடுத்தும் ஓர் முயற்சி மறைமுகமாக நிகழ்த்தப்படுகிறது. இக்குழுவில், சட்டவியளாளர்கள், குற்ற விசாரணையாளர்கள் போன்றவர்கள் அங்கத்தவர்களாக இருப்பினும், இவ்வமைப்பின் பொறிமுறைகள் மேலோட்டமாக வரையப்பட்டிருக்கும் நிலையில், இதுவும், மறு ஆய்வுக் குழுவினைப் போல், சந்தேகத்திற்குரிய கருவியாக அமையப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. (2) (ஏ)
(2) (ஏ)
- சித்திரவதை தொடர்பான ஆபத்துக்கள்
பயங்கரவாத முறியடிப்புச் சட்ட வரைவில், நீதிபதியின் தனியார் நேர்காணல்களின் மூலமும், தடையறிவியல் பரீட்சைகளின் மூலமும், அச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலிலிருக்கும் கைதிகளின் உளவியல் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. எனினும், சித்திரவதை நிகழ்த்தப்பட்டமை அறியப்படும் வேளையிலும், அவர்களின் விடுதலைக்கு மாறாக, வேறு தடுப்பு முகாமுக்கு மாற்றப்படுவார்கள். இவ்வாறாக சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படும் நபர்களுக்கு வேறு தடுப்பு சாலைகளிலும் பாதுகாப்பிற்கு உத்தர்வாதமற்ற நிலை நிலவுவது நிதர்சனமாகின்றது. (2)
- பரப்பிக்கப்பட்ட அதிகாரங்கள்
பயங்கரவாத முறியடிப்பச் சட்டத்தின் வரைவின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள்,
எந்தவொரு காவற்துறை அதிகாரி, ஆயுதப்படையினர் அல்லது கடலோர அதிகாரிகளினால், எவ்வித உத்தரவுப் படிவமும் (warrant) இன்றி கைது செய்யலாம். (2)(ஐ)
(2)(ஐ)
இது இலங்கையின் இனவழிப்பு அரசின் அனைத்து துறைகளக்கும் அதிகார சக்திகளை விரிவாக்குகின்றது. PTAயின் கீழ் கைது செய்யும் அதிகாரங்கள் காவற்துறையினரால் மாத்திரமே கடைப்பிடிக்கப்பட்டன. எனினும், CTAயின் கீழ், இவ்வதிகாரங்கள் கடற்படை அதிகாரிகள், இலங்கை இராணுவித்தினர் போன்ற அதிகாரிகளிடம் வழங்கப்பட்டமைக்கான நோக்கங்களை, நாம் உண்ணிப்பாக அவதானிக்க வேண்டும்.
வெளியக அச்சுறுத்தல்களைத் தடுப்பதே ஒரு நாட்டினன் இராணுவத்தின் நோக்கமாகும். அவ்வாறிருக்க, முறியடிப்புச் சட்டத்தின் கீழ் சட்ட ஒழுங்கு அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்குவதனூடாகவும், தமிழீழத்தின் இராணுவமயமாக்கலினூடாகவும், இலங்கைத் தீவு, ஓர் இராணுவ அரசாக உருப்பெறுகிறது. இது ஈழத்தமிழர்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை நிகழ்த்துவதற்கு ஓர் சிறந்த கருவியாகின்றது.
PTAயின் 6வது பிரிவின் கீழ் தேடல்கள் தொடர்பபாகக் குறிப்பிடப்பட்டது போல் CTAயில் வரையப்பட்டமை, முறியடிப்புச் சட்டம் எவ்வாறு ஓர் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் தொடர்ச்சியாக அமைகின்றது என்பதனை வலியுறுத்துகிறது. இவ்வதிகாரங்கள் தொடர்ந்தும் அனைத்து காவற்துறையினருக்கும் வரையப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) | பயங்கரவாதத் முறியடிப்புச் சட்டம் (CTA) |
அனைத்து காவல்த்துறையினரும்;
A) எவரையும் கைது செய்யலாம், B) அனைத்து வளாகங்களிற்குள்ளும் உற்புகுந்து தேடல்களை மேற்கொள்ளலாம், C) எந்த ஒரு தனிமனிதரையோ, வாகனத்தையுமோ நிறுத்தி, விசாரணை மற்றும் தேடல்களை நடாத்தலாம் D) எந்த ஒரு ஆவணத்தையும், அது சம்மந்தமானவற்றையும் பெற்றுக்கொள்ளலாம். (1) (ஒ)
|
இச்சட்டத்தின் கீழ் குற்றச்செயல்கள் எனக் கருதப்படும் செயல்களின் ஈடுபட்டிருப்பதாக கருதப்படும் எவரும், அனைத்துக் காவல்த் துறையினராலும் விசாரணை நோக்கங்களுக்காக தேடல்கக்ளுக்க்கு உற்படுத்தப்படலாம்.
(2)(ஓ) |
(1)(ஒ)
அத்தோடு Inspector Generalன் அதிகாரத்தினை பரிமாற்றம் செய்வதற்கான குறியீட்டு வரைவும், இச்சட்டத்தின் பரந்த அடக்குமுறையினைத் தெளிவாக எடுக்காட்டுகிறது. இப்பரிமாற்றக் குறியீட்டினூடாக, Inspector Generalன் முடிவினால், அதிகாரமற்ற அதிகாரிகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ கைது செய்யும் அதிகாரம் வழங்கப்படும். (2)(ஔ)
(2)(ஔ)
அது மட்டுமின்றி,
Inspector Generalன் அனுமதியுடனும், சம்மந்தப்பட்ட வெளிநாட்டு அரசின் அனுமதியுடனும் …இலங்கைத்தீவிற்கு வெளியே, அதிகாரிகள் விசாரணை நடாத்துவது சட்டபூர்வமான செயலாகும்.(2)(ஃ)
(2)(ஃ)
இந்த வரைவிலக்கணமும், சர்வதேச சட்டக் கோட்பாடுகளுக்குள் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. CTAயின் இவ்வாறான கடுமையான குறியீடுகளினூடாக, தனிமனித உரிமைகள் அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றன. மேலும் புலம்பெயர் நாடுகளில் தமிழிறைமையிற்காகப் போராடுபவர்களுக்கு எதிரான ஒரு அச்சுருத்தலாகவும் அமைகிறது.(2)
இலங்கையில் புதிய யாப்புகளும், அரசுகளும் வந்து போனாலும், தமிழினவழிப்பு என்றும் ஒரு நிரந்தர அம்சமாக இருக்கும் என்பதனை ஈழத்தமிழர்களாகிய நாம் புரிந்து கொள்ளவேண்டும்
செஞ்சுடர்
வெல்வது உறுதி
——————————————————————————————————-
(1) http://www.commonlii.org/lk/legis/num_act/potpa48o1979608/
(2) http://www.sundaytimes.lk/170430/Policy_Legal_Framework.pdf
(4) http://www.dailymirror.lk/article/Repealing-PTA-EU-says-disappointed-over-slow-progress-139686.html
(6) https://www.srilankacampaign.org/wp-content/uploads/2017/05/Joint-CS-Statement-on-CTA-04-05-17-1.pdf
(7) https://www.hrw.org/news/2017/05/18/sri-lanka-anti-terror-bill-revives-concerns-abuse
(8) https://www.huffingtonpost.com/taylor-dibbert/sri-lanka-should-finally_b_9417618.html
Schreib einen Kommentar