இனவழிப்புக் கருவி PTAயும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்

ஈழத்தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒட்டி, கடந்த சில மாதங்களாக தமிழீழத்தில், அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோருமுகமாக, பலதரப்பட்ட போராட்டங்கள் நடாத்தப்பட்டன. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இனவழிப்பு அரசு நடாத்தி இனவழிப்பின் ஓர் கருவியாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) நிலவி வருகிறது.

அவ்வாறிருக்க, புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் பயங்கரவாத முறியடிப்புச் சட்டத்தின் 2017 வரைவும், (CTA) இனவழிப்பக் கருவியாக அமைந்தமை வியப்பிற்குரிய விடயமல்ல. இருப்பினும், இவ்வாறான சட்டபூர்வமான கருவிகளையும்,  தமிழர்களால் நடாத்தப்படும் போராட்டங்கள் மழுங்கடிக்கப்படும் நடவடிக்கைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இதுவே எமது போராட்டத்தின் கோரிக்கைகளை வடிவமைத்து நடாத்துவதற்கு, அடிப்படையாக அமையும்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA)

ஜெயவர்த்தனா அரசின் கீழ் 1978ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம், 1979ம் ஆண்டு தற்காலிகமாகவும், 1982ம் ஆண்டு நிரந்தரமாகவும் அமுள்ப்படுத்தப்பட்டது. இது ஈழத்தமிழ் இளைஞர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை நடாத்துவதற்கு ஓர் கருவியாகப் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. ஆயுதப் போராட்டக் காலங்களில் வரையறைகளின்றி, ஈழத்தமிழர்களை “பயங்கரவாதிகள்” எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்வதோடு, நீதிமன்ற விசாரணையின்றி துன்புறுத்தப்படுவதுடன், படுகொலை செய்யப்பட்டமையும், வலிந்து காணாமலாக்கப்பட்டமையும் அன்றாடமாக நடைபெற்று வந்த ஒன்றாகும். எனினும், இச்சட்டத்தின் அம்சங்களை சட்டபூர்வமாக ஆராய்வோமேயானால், இச்சட்டத்தின் அநீதியான நோக்கங்களையும், இனவழிப்பு நடாத்துவதற்கு ஓர் கருவியாகவும் பிரயோகிக்கப்படுகிறது என்பதையும் ஈழத்தமிழர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

“பயங்கரவாதி” மற்றும் “பயங்கரவாத நடவடிக்கைகள்” போன்ற வார்த்தைப் பிரயோகத்தின் அர்த்தங்கள், PTAயின் கீழ் குறிப்பிடப்படாதமை, அக்குற்றச்சாட்டுக்கள் வரையறையின்றி ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஓர் அடிப்படை இனவழிப்புக் கருவியாக விளங்கி வருகிறது. (1)

அது மட்டுமின்றி, PTAயின் 6வது பிரிவு, இச்சட்டத்தின் நடவடிக்கைகளை, தனது விசாரணைப் பொறிமுறைகளின் வரைவிலக்கணத்தின் மூலம் வெளிக்கொணர்கிறது. இதனைக் குறிப்பாகப் பார்க்கப்போவோமேயாயின், காவல்த்துறையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை அறிவதோடு, இவ்வதிகாரங்களினூடாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் ஈழத்தமிழர்களின் நிலையையும் அறிந்து கொள்ளலாம். (1)

அனைத்து காவற்துறையினரும்;

  1. எவரையும் கைது செய்யலாம்,
  2. அனைத்து வளாகங்களிற்குள்ளும் உற்புகுந்து தேடல்களை மேற்கொள்ளலாம்,
  3. எந்த ஒரு தனிமனிதரையோ, வாகனத்தையுமோ நிறுத்தி, விசாரணை மற்றும் தேடல்களை நடாத்தலாம்
  4. எந்த ஒரு ஆவணத்தையும், அது சம்மந்தமானவற்றையும் பெற்றுக்கொள்ளலாம். (1)
http://www.commonlii.org/lk/legis/num_act/potpa48o1979608/
http://www.commonlii.org/lk/legis/num_act/potpa48o1979608/

இக்குறிப்பீடு, வேறு சட்டங்களின் குறிப்பீடுகளுக்குள் அடங்காது என்பதும் இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (1) இதனால் தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதற்கு அனைத்து அதிகாரங்களையும், PTA வரையறைகளின்றி வழங்குகின்றது.

மேலும், இச்சட்டத்தின் கீழ்;

„விசாரணை நடாத்தும் காவற்துறையினர், விசாரிக்கப்படுபவரை, “நியாயமான” காலநேரங்களில், விசாரணை நடாத்துவதற்கு, எவ்வித வளாகங்களிற்கும் மாற்றலாம். விசாரணைகளின் மூலம் , விசாரிக்கப்படுபவரை இடம் மாற்றுவதற்கு அவ்வதிகாரியிற்கு முழுமையான அதிகாரங்கள் உண்டு“ (1)

என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், “நியாயமான” எனும் வார்த்தையின் பொருள், ஒவ்வொரு தனிமனிதனின் கருத்து வேறுபாடுகளுக்கும் உள்ளாகும் என்பதால், இலங்கை அரசின் நோக்கங்களை நிறைவேற்றுமுகமாக, “எப்பொழுதும்” எனும் அர்த்த்தினை மறைமுகமாகக் கொண்டு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக இது பிரயோகிக்கப்படுகிறது.

http://www.commonlii.org/lk/legis/num_act/potpa48o1979608/

(1)

அத்துடன், விசாரணைக்கு உள்ளாக்கப்படும் நபர்களிடமிருந்து, கையடையாளங்களையோ, அங்க அடையாளங்களையோ பெற்றுக்கொள்வதற்கு, விசாரணை நடாத்தும் அதிகாரிகள் இவ்விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு “அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும்” மேற்கொள்ளலாம். இக்கோட்பாடு, விசாரணைகளுக்கு அதிகமாக உற்படுத்தப்படும் ஈழத்தமிழர்களிற்கு எதிரான தொடர்ச்சியான அடக்குமுறைகளை நிகழ்த்துவதற்கான கருவியாகின்றது.

http://www.commonlii.org/lk/legis/num_act/potpa48o1979608/

இவ்வாறான குறிப்பீடுகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக, சித்திரவதை போன்ற கொடுமை பொறிமுறைகளை சட்டபூர்வமான செயல்கள் ஆக்குகின்றன. இது அடிப்படையான மனித உரிமை மீறல்களாகவும், இனவழிப்பின் அம்சமாகவும் அமைகின்றன. இது ஈழத்தமிழர்களை அன்னியப்படுத்தியும், தனித்துவமாக மையப்படுத்தி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனை மறுப்பதனூடாக, பலர் இனவழிப்பு மறுப்பு எனும் இனவழிப்பினை அறிந்தும், அறியாமலும் நிகழ்த்தி வருகின்றனர்.

இதனைப் போன்ற பல அடக்குமுறை அம்சங்களைக் கொண்ட PTA சட்டத்தினை உடனடியாக மீழ் பரிசீலனை செய்து, அகற்றுமாறு, இலங்கை அரசிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற பல அமைப்புகள் அழுத்தம் தெரிவித்து வருகின்றன.

2015ம் ஆண்டின் இலங்கை அரசு தேர்தலின் பிரசுரிப்புகளின் பொழுது, PTAயினை மாற்றியமைப்பதோடு, அரசியல்க் கைதிகளை விடுதலை செய்வதையும், தனது ஆட்சியின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாக மைத்திரிபால சிரிசேன பிரசரித்திருந்தார். 2 வருடங்கள் கடந்தும், PTA நடைமுறையில் உள்ளது. அத்தோடு, இச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் வழக்குகளின்றி கைதிகளின் வரையறையற்ற தடுப்பிலும், வலிந்து காணாமலாக்கப்பட்டும் இருப்பதில் எந்த ஒரு முன்னேற்றங்களும் இல்லை. (8)

தற்பொழுது அரசியற் கைதிகளுக்கான போராட்டம் ஓய்ந்திருந்தாலும், இப்போராட்டம் ஓயப்போவதில்லை என்பதனை CTAயின் வரைவு தெளிவாக்குகின்றது. ஏனெனில், நடைமுறையிலுள்ள PTAயை விட, வரப்போகும் CTA மோசமானது. இதனை, ஈழத்தமிழர்களாகிய நாங்கள் புரிந்து கொள்வோமேயானால், எதிர்வரும் போராட்டங்களில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள், தமிழினவழிப்பின் கண்ணோட்டத்திலிருந்து வைக்கப்படவேண்டும். தமிழினவழிப்பு எனும் கண்ணோட்டம் தவிர்க்கப்பட்டால், அரசியற் கைதிகள் போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வினை, நாம் என்றும் காண முடியாது.

செஞ்சுடர்

வெல்வது உறுதி

——————————————————————————————————-

 

(1) http://www.commonlii.org/lk/legis/num_act/potpa48o1979608/

(2) http://www.sundaytimes.lk/170430/Policy_Legal_Framework.pdf

(3) https://eeas.europa.eu/headquarters/headquarters-homepage/35020/delegation-european-parliament-pays-official-visit-sri-lanka_en

(4) http://www.dailymirror.lk/article/Repealing-PTA-EU-says-disappointed-over-slow-progress-139686.html

(5)https://www.fhr.org.za/files/6214/9254/5277/SRI_LANKAS_DRAFT_COUNTER_TERRORISM_ACT_-_PUBLICATION_DRAFT_-_18_APRIL_2017.pdf

(6) https://www.srilankacampaign.org/wp-content/uploads/2017/05/Joint-CS-Statement-on-CTA-04-05-17-1.pdf

(7) https://www.hrw.org/news/2017/05/18/sri-lanka-anti-terror-bill-revives-concerns-abuse

(8) https://www.huffingtonpost.com/taylor-dibbert/sri-lanka-should-finally_b_9417618.html

 

Kommentar hinterlassen

Schreib einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht.


*