
தமிழீழ மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கிறார்கள் எனும் குற்றசாட்டிற்கு பதிலளிக்கும் வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமராய்வுப் பிரிவினைச் சேர்ந்த யோ. யோகி அவர்கள் 2009ம் ஆண்டு புலிகளின் குரலுக்கு ஒரு செவ்வியினை வழங்கியிருந்தார்.
அச் செவ்வியில் மேலும் பல கருத்துகளைத் தெரிவிக்கையில், அமெரிக்கா தொடர்பாகவும் இந்தியா தொடர்பாகவும் தனது கருத்துகளைப் பதிவு செய்திருந்தார். அது மட்டுமில்லாமல் உலகத்தின் ஒரு புதிய கோட்பாடு தமிழீழத்தில் பரிசோதிக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துள்ளார்.
உலகத்தின் வல்லாதிக்க சக்திகள் இணைந்து ஒரு கோட்பாட்டை முன்வைக்கையில், அக்கோட்பாட்டத்திற்கு எதிராக தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் முன்வைக்கப்பட்டதே நந்திக்கடல் கோட்பாடாகும். இச் செவ்வியின் போது பல எறிகணைகளின் சத்தம் கேட்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
– நிதர்சன்
Schreib einen Kommentar