
தமிழீழத் தேசியத் தலைவரின், “இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி” எனும் கூற்றுக்கிணங்க தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் புதிய பரிமாணம் உருப்பெறவேண்டும்.
அதன் அடிப்படையில் எதிர்வரும் ஆவணி 4ம் திகதியன்று, சுவிஸ்நாட்டின் பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள தமிழர் களறியில், “எனது மக்களின் விடுதலைக்காக – தலைவர் பிரபாகரன் அவர்களின் கருத்துத்தொகுப்பு” எனும் நூல், மீள்பதிப்புச்செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது.
1993ம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைச் செயலகத்தால் இந்நூல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1984ம் ஆண்டிலிருந்து 1993ம் ஆண்டுவரை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் எழுதப்பட்ட கடிதங்களும், அவரால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட செவ்விகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
2009ம் ஆண்டிற்குப் பின்னர், சர்வதேசக் கூட்டுமுயற்சிகளுடன் தமிழ் இனவழிப்பு எனும் நிகழ்ச்சி நிரல் மிகத்தெளிவான முறையில் ஐந்தாக் கட்ட ஈழப்போராக நடாத்தப்பட்டு வருகின்றது. ஏராளமான தமிழர்களும், தமிழீழச் செயற்பாட்டாளர்களும் இத்திட்டங்களுக்குள் அறிந்தும் அறியாமலும் சிக்குண்டுவிட்டனர். எனவே, காலத்தின் தேவை கருதி, இந்நூல் மீள்பதிப்புச் செய்யப்பட்டு வெளிபிடப்படுகிறது.
நிகழ்வின் விபரங்கள்:
ஞாயிற்றுக்கிழமை 04.08.2019
காலை 11.00 மணி முதல்
தமிழர்களரி
ஐரோப்பாத்திடல் 01
3008 பேர்ண், சுவிற்சர்லாந்து
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
வெல்வது உறுதி

Schreib einen Kommentar