„Structures of Tamil Eelam: A Handbook“ எனும் நூலின் உத்தியோகபூர்வ வெளியீடு

 சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் அக்கினிப் பறவைகள் அமைப்பினால் „Structures of Tamil Eelam: A Handbook“ (தமிழீக் கட்டுமானங்கள்- ஒரு கைநூல்) எனும் நூல் உத்தியோகபூர்வமாக வெளியீடுசெய்யப்பட்டுள்ளது. தமிழர் களறியின் திறப்புவிழாவின்போது இந்நூல் வெளியீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நூலானது முதலாவது பிரதி மாவீரர்களின் திருவுரவப்படத்திற்குக்  காணிக்கையளிக்கப்பட்டது. மேலும் கல்வி, ஆன்மீகம், போராட்டம் சார்ந்தவர்களுக்கு சிறப்புப்பிரதிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அக்கினிப்பறவைகள் அமைப்பின் சார்பாக ஒரு உரை நிகழ்த்தப்பட்டது.


அவ்வுரையில் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டத்தோடு, இந்நூலின் ஆக்கத்துக்காக உழைத்தவர்களுக்கும் மற்றும் இந்நூல் வெளியீட்டுக்கு ஆர்வம் காட்டி ஆதரவுதந்த ஊடகத்துறையினருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

அத்தோடு இந்நூலின் இரண்டாவது பிரதியை உருவாக்கும்போது, அப்பணிக்காக முன்னாள்ப் போராளிகளின் உதவிகளும் அவ்வுரையின் மூலம் நாடப்பட்டுள்ளது.
நூல்வெளியீட்டினைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்து கொண்ட மக்களினால் ஏராளமான நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   

Kommentar hinterlassen

Schreib einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht.


*