
சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள Waisenhausplatz எனும் இடத்தில் தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களதும் மற்றும் கேணல் சங்கர் அவர்களினதும் நினைவு நிகழ்வு நடைபெற்றது.

மதியம் 14.45 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வு பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மாவீரர் திருவுருவப்படத்திற்கும் மற்றும் தியாகதீகம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரினது திருவுருவப்படங்களுக்குமான ஈகைச்சுடரேற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டது. பின்பு மலர்வணக்கமும் அதற்குப்பின் அகவணக்கமும் இடம்பெற்றன.



அகவணக்கத்தைத் தொடர்ந்து அக்கினிப் பறவைகள் அமைப்பினரால் மேற்கொள்ளப்ப்படும் அடையாள உண்ணாநிலைப்போராட்டத்தின்போது அவர்களால் முன்வைக்கப்பட்ட பத்துக்கோரிக்கைகளும் ஜேர்மன் மொழியில் வாசிக்கப்பட்டன. மேலும், அக்கினிப்பறவைகள் அமைப்பினரால் சுவிஸ் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் ஜேர்மன் மொழியில் வாசிக்கப்பட்டது.

15.30க்கு Waisenhausplatzஇல் நினைவு நிகழ்வு முடிவுபெற்றவுடன் Europaplatz எனும் இடத்தில் அமைந்துள்ள சிவன்கோவில் நோக்கிய நடைப்பயணம் ஆரம்பமாகியது. மாலை 17.00 மணியளவில் இந்நடைப்பயணம் சிவன்கோவிலை வந்தடைந்த பின்னர் 17.30 மணியளவில் ஒன்று கூடல் ஒன்று இடம்பெற்றது.


இவ்வொன்றுகூடலில் சுவிஸ் நாட்டின் மத்திய அரசுக்கு எழுதப்பட்ட கடிதம் தமிழ்மொழியில் வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களினதும், கேணல் சங்கர் அவர்களினதும் நினைவுகள் பகிரப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் சிவன்கோவிலில் தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களுக்கான ஒரு சிறப்புப்பூசை நடைபெற்றதோடு, 21.00மணியளவில் அக்கினிப்பறவைகள் அமைப்பின் அடையாள உண்ணாநிலை முடிவுபெற்றதோடு நிகழ்வு நிறைவுகண்டது.

Schreib einen Kommentar