
30.05.1967 அன்று Biafra எனும் ஒரு நாடு Nigeria நாட்டிடமிருந்து பிரிந்து தனது சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தது. Biafra நாட்டின் பிரதேசம் தனது ஆளுமைக்குள் உட்பட்டது என்ற எண்ணத்தைக் கொண்ட „Nigeria“ நாடு, Biafra நாட்டை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
இதற்கு எதிராகப் Biafra தேசம் வீரத்தோடும் தியாகத்தோடும் போராடியது. இருப்பினும் பிரித்தானியா, அமெரிக்கா, செவியேட் போன்ற நாடுகளின் உதவியும், ஆதரவு பெற்ற Nigeria நாடு, Biafra நாட்டின் எதிர்ப்பினைச் சிதைத்தது. அத்தோடு பொருளாதாரத்தடையின் மூலம் ஒரு மில்லியன் மக்களையும் கொன்று, இனவழிப்பு நடவடிக்கையின் மூலம் தனது எண்ணத்தை நிறைவேற்றியது. இறுதியாக 15.01.1970 Biafra தேசம் Nigeriaவிடம் சரணாகதியடைந்தது.
Biafra நாடு வீழ்த்தப்பட்டத்தற்கும் மற்றும் முள்ளிவாய்க்காலில் எமக்கு நிகழ்த்தப்பட்டதற்க்கும் பல ஒருமைப்பாடுகள் உள்ளன. முதலாவதாக இனவழிப்பு மூலம் இரு தேசங்களினதும் விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டது. இரண்டாவதாக உலகநாடுகளின் பிரதான வல்லாதிக்க சக்திகளின் உதவியோடு இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் நந்திக்கடலில் தமிழர்கள் இலங்கையிடம் சரணாகதியடையவில்லை. தமிழர்களின் இறைமையை விட்டுக்கொடுக்காமல் கொள்கைப்பற்றோடு இறுதிவரை போராடினார்கள்.
Biafra தேசம் சரணாகதியடைந்ததால், இன்று வரை அந்நாட்டின் பெற்றோலிய வளங்கள் Nigeriaவினாலும் சர்வதேச பெற்றோலிய நிறுவனங்களினாலும் சுரண்டப்படுகிறது. அத்தோடு பெற்றோலிய உற்பத்தியில் இருந்து வரும் லாபங்கள் Biafra நாட்டுமக்களுக்கு வழங்கப்படாமையினாலும் மற்றும் அந்த உற்பத்தியினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினாலும் Biafra தேசம் இன்றுவரை அடிமைத்துவ நாடாக உள்ளது.
வரப்போகும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பினை தமிழர்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், தமிழர்களின் இறைமை பறிபோய்விடும். அதன் பின் தமிழர்கள் தங்களின் எதிர்காலத்தை சுயமாகத் தீர்மானிக்க முடியாத நிலையும் மற்றும் தமிழர்களின் வளங்கள் இலங்கையாலும், சர்வதேசத்தாலும் சுரண்டப்படும் நிலையும் ஏற்படும்.
ஆதலால் தமிழர்களின் இறைமை விட்டுக்கொடுக்க முடியாத ஒரு விடயம் என்பதனை, தமிழர்கள் இந்த யாப்பினை ஏற்க வைக்கும் தேர்தலைப் புறக்கணிப்பதின் மூலம், தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
Schreib einen Kommentar