எம்மைப் பற்றி

சமூதாயத்தில் நடைபெறும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் மற்றும் தவறுகளை எவ்வாறு திருத்த வேண்டும் என்பதைச் சொல்லுவதுமே ஒரு ஊடகத்தின் கடமையாகும். புரட்சி Media இறைமையை இழந்து நிற்கின்ற ஈழத்தமிழர்களுக்கான ஒரு ஊடகமாகும். அதாவது நந்திக்கடலில் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழீழத்துக்கான போராட்டத்திற்குத் துணையாக புரட்சி Media தனது கடமையைச் செய்யும்.

பூகோள அரசியலின் காரணமாக அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, சீனா போன்ற நாடுகளும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் இனவழிப்பினூடாகத் தமிழிறைமையை அழித்தன. அந்நாடுகளே இப்பொழுது தமிழர்களை பகடைக்காய்களாக உபயோகிக்கித்து, தமிழர்களை தமிழிறைமையிலிருந்து திசைதிருப்பி தமிழிவழிப்பை மழுங்கடுக்கின்றனர். அதனை அம்பலப்படுத்துவதையும் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தமிழிறைமையின் பால் திசைதிருப்புவதையும் புரட்சி Media தனது கடமையாகக் கொண்டுள்ளது.

வெல்வது உறுதி