போராட்டத்தின் மீதும் சேறு பூசும் சில இணையத்தளங்கள்

தமிழீழத் தேசியத்தலைவர் மீதும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் சேறு பூசும் வகையில் சில இணையத்தளங்கள் ஈடுபட்டிருப்பது முற்றிலும் தவறானதும் கண்டிக்கத் தக்க விடயமும் ஆகும். இறுதிபோரின் போது போராளிகளின் குடும்பங்களைப் பாதுகாக்கும் வகையில் அவர்களை வன்னியை விட்டு வெளியே அனுப்பும்படியான சுற்றறிக்கை ஒன்று தலைவர் அவர்களால் வெளிவிடப்பட்டிருந்தது எனக் குறிப்பிட்டு, தலைவர் அவர்களின் தெளிந்த, நியாயம்மிக்க செயற்பாடுகளையும், ஈகம் நிறைந்த விடுதலைப் போரையும் கொச்சைப் படுத்தும் நோக்கோடு உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பிவருவது நிறுத்தப்பட வேண்டும்.

எந்தவொரு தேவையற்ற சுற்றறிக்கைகளையும் தலைவர் அவர்கள் வெளியியிட்டிருக்கவில்லை என்பது ஆணித்தரமான உண்மை. இக்கட்டான போர்ச்சூழலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளிலும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் அவர்களை முடிந்தளவு பாதுகாக்கும் செயற்பாடுகளிலும் தலைவர் அவர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தமை நிதர்சனம்.

மேலும் தலைவர் அவர்களின் குடும்பத்தவர்கள் இறுதி முள்ளிவாய்க்கால் வரை அங்குதான் நின்றிருந்தனர் என்பதும் ஆதாரத்துடனான உண்மையாகும். அத்தோடு தலைவர் அவர்களின் பெற்றோர் இராணுவாத்தாற் கைது செய்யப்பட்டு சிறையில் கடுந்துன்பங்களை அனுபவித்தனர் என்பதும் இதன் காரணமாகவே „மாதந்தை திரு. வேலுப்பிள்ளை “ அவர்கள் சாவடைந்தார் என்பதும் கூட மறுக்க முடியாத அதேவேளை மறக்கவும் முடியாத நிகழ்வுகளாகும்.

எனவே சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று அவர்களின் கயமைத் தனங்களுக்குத் தூபமிடும் தமிழ் ஊடகங்கள் தமது வரலாற்றுத் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
வெல்வது உறுதி.

Kommentar hinterlassen

Schreib einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht.


*