சுவிஸ் நாட்டில் ரணில்

சுவிஸ் நாட்டில் நடைபெறும் WEF(World Economic Forum) என்றழைக்கப்படும் ஒரு நிகழ்வில் ரணில் பங்குகொள்ளவுள்ளார். அதற்கு அவர் 15ம் திகதி அன்று இலங்கைத் தீவிலிருந்து புறப்பட்டுவிட்டார் என்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் 40கும் மேற்பட்ட அரசாங்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் மற்றும் 2500க்கு மேற்பட்ட பொருளாதார முக்கியஸ்தவர்களும் ஒன்றுகூடவுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற wefஇன் நிகழ்விற்கு இலங்கை அரசு முதன்முதலாக அழைக்கப்பட்டிருந்தது. இது வெளிப்படுத்தி நிற்பது என்னவென்றால், மேற்குலக நாடுகளும் இலங்கையில் முதலீடுகள் செலுத்த ஆர்வாமாகவுள்ளனர் என்பதாகும்.

அதனால் அவர்கள் முதலீடு செய்ய இலங்கைத் தீவில் திடநிலையான ஒரு சூழலை விரும்புவார்கள் என்பதால், வரபோகும் யாப்பு தமிழர்களின் நலனை மழுங்கடித்து இலங்கைத் தீவின் திடநிலையைப் பாதிக்கும் என்பதை தமிழர்கள் ராஜதந்திர சந்திப்புகளில் விளக்கப்படுத்தும் பட்சத்தில், தமிழர்கள் தங்களின் அடிப்படைகளை விட்டுக்கொடுக்காமல் பேரம்பேசும் சக்தியாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.slbc.lk/index.php/news/189-breaking/3163-the-premier-will-leave-for-davos-today

 

Kommentar hinterlassen

Schreib einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht.


*